திருச்சி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை காவல் கண்காணிப்பாளர் சி.சியாமளாதேவி உத்தரவின்பேரில், காவல்துறை கண்காணிப்பாளர் வின்சென்ட் மேற்பார்வையில் தனிப்படை போலீசார், அரியமங்கலம் காவல் நிலைய போலீசாருடன் இணைந்து அரியமங்கலம் சோதனை சாவடி 4- ல் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த இரண்டு ஆம்னி வேன்களை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் அதில் சுமார் 1500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டறியப்பட்டது. அந்த வேனில் வந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் வடக்கு காட்டூர் பகுதியை சேர்ந்த நசுருதீன், அரியமங்கலம் காமராஜ் நகர் பகுதியைச் சேர்ந்த ஆசிப் அலி, அரியமங்கலம் சிவகாமி அம்மையார் தெருவை சேர்ந்த இஸ்மாயில் மற்றும் ஜெயசீலன், இன்னொரு இஸ்மாயில் உள்ளிட்ட 6 பேர் ரேஷன் அரிசியை கடத்திச் செல்வது தெரிய வந்தது. அதன்பேரில் அவர்கள் 6 பேரையும் கைது செய்த போலீசார் ரேஷன் அரிசி மற்றும் 2 வேன்களையும் பறிமுதல் செய்தனர்.

Comments are closed.