லால்குடி அருகே உள்ள செல்லியம்மன் கோவிலில் 500 பவுன் நகை, பல லட்சம் கையாடல்… * திருச்சி எஸ்பி அலுவலகத்தில் கிராமமக்கள் புகார்!
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள மால்வாய் கிராமமக்கள், திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தனர். அதில்,
திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி ஒன்றியம், மால்வாய் கிராமத்தில் அய்யனார், பிடாரியார், செல்லியம்மன், கருப்பண்ணசாமி தாவா கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 2019-ம் ஆண்டு கிராம மக்களுக்கு தெரியாமல் கோவில் வங்கி கணக்கில் இருந்து கடந்த 2009- ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை கோவில் உத்தேச வரவு செலவு திட்டத்தை மீறி ஒருவர் பல லட்சம் ரூபாய் கையாடல் செய்துள்ளார். மேலும், கோவிலுக்கு சொந்தமான 500 பவுன் தங்க நகைகள், வெள்ளி மற்றும் உண்டியலில் செலுத்தப்படும் பணத்தை கையாடல் செய்துள்ளார். மேலும், மக்களிடம் ரூ.40 லட்சம் வரை நன்கொடை பெற்று கோவில் திருப்பணிக்கு செலவு செய்யாமல் ஏற்கனவே செய்த பணியில் கணக்கு காட்டி ஏமாற்றியுள்ளார். இதற்கு அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனர். இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறையிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, கோவில் சொத்துகளை கையாடல் செய்த கோவில் நிர்வாகி மீதும், அவருக்கு துணை போகும் அதிகாரிகள் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
Comments are closed.