ஹிமாச்சலில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. தொடர் மழையின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் கூறும் பொழுது ஹிமாச்சலின் அனைத்து மாவட்டங்களிலும் கனமழை காரணமாக நீர் நிரம்பிக் காணப்படுகிறது. வானிலை மையம் ஹிமாச்சலின் 10 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை கொடுத்துள்ளது. கடந்த 36 மணி நேரத்தில் 14 இடங்களில் பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. 13 இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. 700 சாலைகள் மூடப்பட்டுள்ளன. சிம்லா மாவட்டத்தில் சில சாலைகள் மூடப்பட்டுள்ளன. நிலச்சரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்து உள்ளனர். அதேபோல ஹிமாச்சலின் பிறப்பகுதியில் ஏற்பட்ட நிலச் செலவில் இரண்டு பேர் உயிரிழந்தனர் என்று கூறினர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.