Rock Fort Times
Online News

மணப்பாறையில் குடிபோதையில் தகராறு செய்தவர்களை தட்டிக் கேட்ட போலீஸ் ஏட்டு மீது தாக்குதல் 5 பேர் கைது..

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள கோவில்பட்டி சாலையில் சேதுரெத்தினபுரம் பிரிவு அருகே சிலர் குடி போதையில் பிரச்சனை செய்து கொண்டிருந்தாக தொிகிறது. இது குறித்த தகவலின் போில் மணப்பாறை போலீஸ் ஏட்டு ராஜேந்திரன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றாா்.அப்போது அங்கு
தகராறில் ஈடுபட்டவா்களிடம் விசாரித்த போது அவா்கள் ராஜேந்திரனை கீழே தள்ளியதுடன், தகாத வார்த்தைகளால் பேசி கொலைமிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீஸ் ஏட்டு ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில் பிரச்சனையில் ஈடுபட்டதாக ஜீவா தெருவை சேர்ந்த சரவணகுமார் (வயது 22), கரிக்கான் குளம் பகுதியை சேர்ந்த ஜீவா (20), ரஞ்சித் குமார் (23), சேதுரெத்தினபுரத்தை சேர்ந்த கோபிநாத் (23) மற்றும் ஜீவானந்தம் (20) ஆகிய ஐந்து போ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்