திருச்சி, ராம்ஜி நகர் அருகே வன உயிரின பொருட்கள் கடத்தி வரப்படுவதாக திருச்சி மாவட்ட வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் ராம்ஜி நகர் பகுதியில் வனத்துறை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருச்சியை நோக்கி வந்த ஒரு காரை சோதனை செய்ததில் அதில் இரண்டு யானைத் தந்தங்கள் இருந்தது. அந்த தந்தங்களை விற்பனைக்காக கடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அந்த இரண்டு தந்தங்களை பறிமுதல் செய்த வனத்துறை அதிகாரிகள் அதனை கடத்தி வந்த ராமசாமி(65), திருப்பதி(70), ஞானசேகரன்(61), சுப்ரமணி(58), கார்த்தி(29) ஆகிய 5 பேரை கைது செய்தனர். அந்தத் தந்தங்கள் யாருக்கு, எங்கு கடத்திச் செல்லப்பட்டது என்பது குறித்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Comments are closed.