Rock Fort Times
Online News

திருச்சியில் திருட்டு போன ரூ.10 லட்சம் மதிப்பிலான 400 செல்போன்கள் மீட்பு!

திருச்சி மாவட்டத்தில் பல்வேறு சம்பவங்களில் திருட்டுப் போன ரூ.10 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. திருச்சி புறநகர் மாவட்டத்தில் 35 காவல் நிலையங்கள் உள்ளன. இந்த காவல் நிலைய எல்லைகளில் தவறவிட்ட செல்போன்கள் மற்றும் திருட்டுப் போன செல்போன்கள் என மொத்தம் 400 செல்போன்கள் காவல்துறையினரால் மீட்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 10 லட்சம் ஆகும். இதில் 100 செல்போன்களை திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் ஐபிஎஸ் உரியவர்களிடம் ஒப்படைத்தார். மீதமுள்ள செல்போன்கள் அந்தந்த காவல் நிலைய அதிகாரிகள் தவறவிட்டவர்களிடம் ஒப்படைத்தனர்.

   

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்