Rock Fort Times
Online News

ஓசியில் பிரெட் ஆம்லெட் 4 காவலர்கள் பணி இடைநீக்கம்…

வீடியோ இணைப்பு!

சென்னை கூடுவாஞ்சேரியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் விஜயலட்சுமி. இவர் மற்றும் அதே காவல் நிலையத்தில் பணிபுரியும் ஜெயமாலா உள்ளிட்ட 4 பேர் கடந்த 4-ம் தேதி படப்பையில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த பகுதியில் உள்ள ஜூஸ் கடைக்கு சென்ற அவர்கள் 4 பேரும் ஜூஸ், பிரட் ஆம்லெட், சாக்லேட், தண்ணீர் பாட்டில் ஆகியவற்றை வாங்கினர். அதற்கான தொகையை கடைக்காரர் கேட்ட போது பணம் இல்லை ஓசியில் தருமாறு கேட்டுள்ளனர் . ஓசியில் தர முடியாது என்று கடைக்காரர் கூறவே, அவரிடம் 4 பேரும் தகராறு செய்ததோடு கடையின் உரிமத்தை ரத்து செய்து விடுவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து கடையின் உரிமையாளர் மணிமங்கலம் போலீசில் புகார் அளித்தார். இது குறித்த தகவலின் அடிப்படையில் தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் சம்பவ இடத்துக்கு சென்றுஅங்கு பதிவான சிசிடிவி காட்சிகளை பார்வையிட்டார்.

 

அப்போது கடைக்காரர் கூறியது உண்மை என்பது தெரிய வந்தது. இதையடுத்து ஜூஸ் கடையில் தகராறு செய்ததாக விஜயலட்சுமி உள்பட 4 காவலர்களையும் பணியிடை நீக்கம் செய்து கமிஷனர் உத்தரவிட்டார். ஒரே நேரத்தில் 4 பெண் காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்