திருச்சி மாவட்டம் தா.பேட்டை அருகே கண்ணனூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாமிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது மேடை அருகே நின்றிருந்த பேராசிரியர் முகிலன், மேடைக்கு முன்பு இடையூறாக நின்று கொண்டிருந்த மூன்றாமாண்டு படிக்கு மாணவர் ஒருவரை இருக்கையில் அமருமாறு கூறியுள்ளார். அதை மதிக்காமல் அந்த மாணவர் அங்கேயே நின்று கொண்டிருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் மாலை 4 மணியளவில் கல்லூரியில் இருந்து வெளியே சென்ற பேராசிரியர் முகில னிடம், மது போதையில் வந்த மாணவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் பேராசிரியர், அந்த மாணவனின் ஐடி கார்டை வாங்கி வைத்துக்கொண்டு சென்று விட்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த அந்த மாணவன், காலி மது பாட்டிலில் பெட்ரோல் நிரப்பிக்கொண்டு தனது சக நண்பர்களான அதே கல்லூரியில் படிக்கும் மாணவர்களுடன் பைக்கில் வந்து கல்லூரி முன்பு வீசிவிட்டு சென்று உள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்ததில், பெட்ரோல் குண்டு வீசியது அதே கல்லூரியில் படித்து வரும் துறையூரை சேர்ந்த பவித்ரன் (22), கபிலன்(22), பிரதீஷ்(21), ஜீவா (20) என்பதும், இவர்கள் பேராசிரியரை மிரட்டுவதற்காக கல்லூரி வாசலில் பெட்ரோல் குண்டு வீசி சென்றதும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து கல்லூரி மாணவர்கள் 4 பேரையும் கைது செய்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.