திருச்சி மாவட்டத்தில் உள்ள முக்கியமான சுற்றுலா தளங்களில் ஒன்று முக்கொம்பு. இங்கு திருச்சி மட்டுமன்றி அருகில் உள்ள கரூர், பெரம்பலூர், அரியலூர் போன்ற மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினரோடு வருகை தந்து இயற்கை சூழ்ந்த காட்சிகளை கண்டு ரசித்து செல்கின்றனர். இங்கு பொதுமக்கள் மட்டுமின்றி காதலர்களும் அதிக அளவு வந்து செல்கின்றனர். அந்தவகையில் கடந்த 4-ம்தேதி அன்று காதலனுடன் தனிமையில் இருந்த 17 வயது சிறுமியிடம் ஜீயபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சசிகுமார் மற்றும் பிரசாந்த், சித்தார்த், சங்கர் ராஜாபாண்டியன் ஆகிய 3 காவலர்கள் காதலனை விரட்டி அடித்து சிறுமியை காரில் ஏற்றி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த சிறுமி கொடுத்த புகாரின்பேரில் உரிய விசாரணை நடத்த திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வீ. வருண்குமார் ஐபிஎஸ் உத்தரவிட்டார். அதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையின் அடிப்படையில் நான்கு காவலர்களும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 4 காவலர்களும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.இந்த சம்பவம் குறித்து ஜீயபுரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தமிழக சட்டசபை வரை எதிரொலித்தது. இந்தநிலையில் காவலா்கள் 4 பேரையும் ஜீயபுரம் போலீசார் ஒருநாள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் 4 பேரும் மகளிர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீவத்சன் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.