Rock Fort Times
Online News

திருச்சியில் இருசக்கர வாகனங்கள் திருடிய 4 பேர் கைது – வாகனங்கள் பறிமுதல்

திருச்சி காந்தி மார்க்கெட் , பாலக்கரை பகுதிகளில் அடிக்கடி இருசக்கர வாகனங்கள் திருட்டு போனது. இதுகுறித்து போலீசாருக்கு வந்த புகார்களின் போில், மோட்டார் சைக்கிள்கள் திருட்டு குறித்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் இருசக்கர வாகனங்களை திருடி புதுக்கோட்டையில் விற்பனை செய்த ராஜேஷ் விண்டி ( 23) , அருண்குமார் (19) மற்றும் இரண்டு சிறுவர்கள் உள்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து திருடப்பட்ட இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து பாலக்கரை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்