திருச்சி, எடமலைப்பட்டிபுதூர் போலீசார் ராம்ஜி நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த கங்காதேவி (வயது 57)என்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். இதேபோல, கே.கே. நகர் எல்.ஐ.சி காலனி பகுதியில் புகையிலை பொருட்கள் விற்றதாக கே.சாத்தனூர் பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் (37), கே.கே. நகர் உடையான்பட்டி சாலை பகுதியைச் சேர்ந்த முகமது மைதீன் ஆகிய இரண்டு பேரை கே.கே. நகர் போலீசார் கைது செய்தனர். மேலும், உறையூர் ராமலிங்க நகர் குழுமாயி அம்மன் கோவில் அருகே புகையிலை பொருட்கள் விற்றதாக திருச்சி தெற்கு தாராநல்லூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மனோகர் (43) என்பவரை உறையூர் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் மற்றும் ஒரு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.

Comments are closed.