பெண்ணிடம் உல்லாசமாக இருந்தபோது வீடியோ எடுத்து ரூ.10 லட்சம் கேட்டு இன்ஜினீயரை மிரட்டிய 4 பேர் கைது…!.
சென்னை திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் (59) என்பவர் மத்திய பொதுப்பணித் துறையில் செயற்பொறியாளராக பணியாற்றி வருகிறார். காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு சாலை பகுதியில் தனி வீடு எடுத்து தங்கியுள்ள இவருக்கும், மயிலாடுதுறை சீனிவாசபுரம் கம்பர் தெருவை சேர்ந்த ஐயப்பன் மனைவி சுபாஷினி (40) என்பவருக்கும் புரோக்கர் மூலமாக தொடர்பு ஏற்பட்டு கடந்த 6 மாதமாக பழகி வந்தனர். அந்தப் பெண் ஒவ்வொரு முறையும் காரைக்காலுக்கு செல்லும்போது குடும்ப வறுமையை காரணம் காட்டி சிறுக, சிறுக வெங்கடேச னிடம் பணம் பெற்றுள்ளார். ஒரு கட்டத்தில் அவரிடம் இருந்து அதிக பணம் பெற நினைத்த சுபாஷினி, கடந்த மாதம் 27ம் தேதி இருவரும் உல்லாசமாக இருந்ததை வெங்கடேசனுக்கு தெரியாமல் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். பின்னர், வெங்கடேசனை மயிலாடுதுறை காவேரி நகர் பகுதியில் உள்ள தனியார் விடுதிக்கு வரவழைத்த சுபாஷினி, அங்கு மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் மாநில இளைஞரணி துணை செயலாளரான மயிலாடுதுறையை சேர்ந்த கில்லி பிரகாஷ் (எ) பிரகாஷ் (40) மற்றும் முகமது நசீர் (39), தினேஷ் பாபு (31) ஆகியோருடன் கூட்டு சேர்ந்து வெங்கடேசனின் கழுத்தில் கத்தியை வைத்து அவரிடம் இருந்து ஏடிஎம் கார்டு மற்றும் ஜிபே வாயிலாக ரூ.2.70 லட்சத்தை பிடுங்கி கொண்டனர். மேலும், சுபாஷினியுடன் வெங்கடேசன் உல்லாசமாக இருந்த வீடியோவை வெளியிடாமல் இருக்க கூடுதலாக ரூ.10 லட்சம் தர வேண்டும் என கூறி அவரை மிரட்டி அனுப்பி உள்ளனர். இச்சம்பவம் குறித்து மயிலாடுதுறை காவல் நிலையத்தில் வெங்கடேசன் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து கில்லி பிரகாஷ், சுபாஷினி உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்து மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட கில்லி பிரகாஷ் 2011 ஆம் ஆண்டு முதல் சரித்திரப்பதிவேடு குற்றவாளி என்று கூறப்படுகிறது.

Comments are closed.