Rock Fort Times
Online News

திருச்சி காந்தி மார்க்கெட்டில் கடையின் பூட்டை உடைத்து 35 கிலோ முந்திரி பருப்பு திருட்டு…

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் ஜெபராம் (வயது 33). இவர் காந்தி மார்க்கெட்டில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கமபோல் கடையில் வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். இன்று ( 10.07.2023 ) காலை கடையை திறக்க வந்து போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது மிளகாய்த்தூள் தூவப்பட்டிருந்தது. மேலும், கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த
35 கிலோ முந்திரிப் பருப்பு, 5 கிலோ பேரிச்சம்பழம், ரூ.5 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டு இருந்தது. இது குறித்து காந்தி மார்க்கெட் போலீசில் ஜெபராம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்