Rock Fort Times
Online News

லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை…

திருச்சி  சமயபுரம் தண்ணீர்பந்தலை சேர்ந்த சவரிமுத்து என்பவா் தன் மனைவி ரத்தினமேரி பெயரில் புதிதாக மின் இணைப்பு பெற 2008 ஆம் ஆண்டு சமயபுரம் வணிக மின் ஆய்வாளர் சிவக்குமாரை அனுகியுள்ளாா். புதிய மின் இணைப்பு வழங்க வணிக மின் ஆய்வாளா் சிவக்குமாா் 900 ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளாா். லஞ்சம் கொடுக்க விரும்பாத சவாிமுத்து, வணிக மின் ஆய்வாளர் சிவக்குமாா் மீது லஞ்ச ஒழிப்பு போலீசாாிடம் புகாா் அளித்துள்ளாா். லஞ்ச ஒழிப்புத்துறையினர் கொடுத்த ரசாயனம் தடவிய பணத்தை மின் ஆய்வாளா் சிவக்குமாா் பெற்றபோது அப்போதைய திருச்சி லஞ்ச ஒழிப்பு துறை காவல் ஆய்வாளர் சூரக்குமாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் விசாரணை திருச்சி, ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் இறுதி விசாரணை இன்று ( 11.07.2023 ) திருச்சி ஊழல் தடுப்பு வழக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. லஞ்சப்பணம் கேட்டுப்பெற்ற குற்றத்திற்காக வணிக மின் ஆய்வாளர் சிவக்குமாருக்கு மூன்றாண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.10,000/- அபராதமும் விதித்து நீதிபதி கார்த்திகேயன் தீா்ப்பளித்தாா்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்