Rock Fort Times
Online News

எடமலைப்பட்டிபுதூர், உறையூர், திருவரங்கத்தில் தொடர் கைவரிசை காட்டிய 3 கொள்ளையர்கள் கைது

திருச்சி எடமலைப்பட்டி புதூர் புதுத்தெருவை சேர்ந்தவர் குருநாதன். இவரது மகன் விஷ்ணு (வயது 27). இவர் தனது வீட்டின் முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்தி இருந்தார். அந்த வாகனம் காணாமல் போனது இதுகுறித்து எடமலைப்பட்டி புதூர் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார் .புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பேபிஉமா வழக்குப்பதிந்து, இது தொடர்பாக எடமடைப்பட்டிபுதூரைச் சேர்ந்த கார்த்திக் என்ற வாலிபரை கைது செய்தார். அவரிடம் இருந்து இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. திருவரங்கம் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் நகர் விஸ்தரிப்புபகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் மோகன். இவரது மகள் ராஜயோகா. இவர் அகிலாண்டேஸ்வரி கோவில் பூஜைக்கு சென்று விட்டு திரும்புகையில் அவரது செல்போன் திருடு போனது. இதுகுறித்து திருவரங்கம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் இந்திராகாந்தி வழக்கு பதிந்து செல்போன் திருடியதாக திருவரங்கத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்ற வாலிபரை கைது செய்தார். அவரிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல் லால்குடி தாழக்குடியைச் சேர்ந்த சந்தோஷ் என்கிற சிறுவனிடம் ஹோட்டலில் இருசக்கர வாகனத்தில் இருந்த செல்போனை திருடியதாகவும், திருவரங்கம் பஞ்சகரை ரோடு ஜே.கே நகரை சேர்ந்த சங்கர் என்பவரிடம் தூங்கிக் கொண்டிருந்தபோது செல்போனை திருடியதாகவும் திருவரங்கத்தை சேர்ந்த ராஜ்குமார் என்ற வாலிபரை கைது செய்தனர். அவரிடம் இருந்து செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. உறையூரில் முகமது சுகாயல் என்பவரின் வீட்டை கள்ளச்சாவி போட்டு திருட முயன்ற சக்திவேல் என்ற கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.

1 Comment
  1. mitolyn reviews says

    **mitolyn reviews**

    Mitolyn is a carefully developed, plant-based formula created to help support metabolic efficiency and encourage healthy, lasting weight management.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்