திருச்சியில் தறி கெட்டு ஓடிய கார் மோதி 3 பேர் படுகாயம்- மின் கம்பத்தில் மோதியதில் காரை ஓட்டியவருக்கும் காயம்…! ( வீடியோ இணைப்பு)
திருச்சி கண் டோன்மெண்ட் எம்ஜிஆர் சிலையில் இருந்து ஐயப்பன் கோவில் வழியாக கலெக்டர் ஆபீஸ் செல்லும் சாலையில் கார் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. அந்த கார் திடீரென தறி கெட்டு ஓடி ஐயப்பன் கோவில் அருகே நடந்துசென்ற 2 பேர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் , அவர்கள்
2 பேரும் காயமடைந்தனர். தொடர்ந்து கட்டுப்பாட்டை இழந்த கார், நிற்காமல் கே.ஆர் பெட்ரோல் பங்க் ரவுண்டானா அருகே பைக்கில் வந்தவர் மீது மோதியது. இதில் பைக்கில் வந்த நபர் படுகாயம் அடைந்தார். மேலும் அந்த கார் வேகமாக சென்று எதிர்திசையிலுள்ள மின்கம்பத்தின் மீது மோதி நின்றது. இதில் காரை ஓட்டிய நபரும் படுகாயம் அடைந்தார். இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கண்டோன்மெண்ட் போலீஸார், காயம் அடைந்த 4 பேரையும் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து தொடர்பாக போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், காரை ஓட்டியவர் மதுபோதையில் இருந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த மாலை வேளையில் கண்டோன்மென்ட் சாலையில் நடந்த இந்த தொடர் விபத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Comments are closed.