தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் பந்தலகுடா ஜாகிர் அருகே 3 பேர் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த கார் நடந்து சென்றவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் தாய், மகள் உள்ளிட்ட 3 பேர் தூக்கி வீசப்பட்டு உயிர் இழந்தனர். மேலும், அந்த வழியாகச் சென்ற 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய காரில் 4 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.