திருச்சி, மண்ணச்சநல்லூர் அருகே பல கோடி ரூபாய் மதிப்புள்ள 3 ஐம்பொன் சுவாமி சிலைகள் கண்டெடுப்பு…!( வீடியோ இணைப்பு)
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள வெங்கங்குடி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவர் வெளிநாட்டில் கப்பலில் தலைமை பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வீட்டிற்கு அருகில் உள்ள அவரது இடத்தில் புதிதாக தண்ணீர் தொட்டி கட்டுவதற்காக பணியாட்களை வைத்து குழித் தோண்டியுள்ளார். அப்போது 8 அடி ஆழ பள்ளத்தில் 3 சுவாமி சிலைகள் மற்றும் அதனுடன் சில பொருட்களும் தென்பட்டது. அந்த சிலைகளை பத்திரமாக எடுத்து வைத்த அவர் இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் மண்ணச்சநல்லூர் போலீசார், வட்டாட்சியர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று சிலையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அந்த சிலைகள் ஐம்பொன்னினால் ஆன பெருமாள், ஸ்ரீதேவி மற்றும் பூதேவி சிலைகள் என்பதும்
அதனுடன் மீட்கப்பட்ட பொருட்கள் சுவாமிக்கு பூஜைகள் செய்ய பயன்படுத்தப்படும் செப்பு பொருட்கள் என்பதும் தெரியவந்தது. இந்த சிலைகள் ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்தது என்றும், அதன் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அந்த சுவாமி சிலைகளை தொல்லியல் துறையினரிடம் ஒப்படைப்பதற்காக மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர் முன்னிலையில் வருவாய்த்துறையினர் எடுத்து சென்றனர்.
Comments are closed.