பாட்டிலுக்கு ரூ.100 எக்ஸ்ட்ரா தள்ளுவண்டியில் கள்ள “சரக்கு”..!- திருச்சி, சமயபுரம் அருகே 3 பேர் கைது…
திருச்சி அருகே உள்ள சமயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்டது புள்ளம்பாடி. இங்கு சட்டத்திற்கு புறம்பாக, தள்ளு வண்டியில் மதுபானங்களை மறைத்து வைத்து ஒரு பாட்டிலுக்கு ரூ. 100 வரை கூடுதலாக வசூலித்து திருட்டுத்தனமாக சரக்கு விற்பனை செய்து வந்தனர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் வைரல் ஆனது. இதையடுத்து சுதாரித்துக் கொண்ட சமயபுரம் போலீசார், கள்ளத்தனமாக மது விற்பனை செய்த ராபர்ட் மற்றும் முத்தமிழ்செல்வன் ஆகிய இரண்டு பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து 10 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்ததோடு கைது செய்து சிறையில் அடைத்தனர். இதேபோல கொள்ளிடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அய்யன் வாய்க்கால் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சரத்குமார் என்பவர் மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரிடம் இருந்து மதுபானங்களை பறிமுதல் செய்து அவரையும் கைது செய்தனர்.
Comments are closed.