திருச்சியில் ரவுடி கொலை வழக்கில் 3 பேர் கைது: பெண்ணுடன் தகாத உறவு வைத்திருந்ததால் தீர்த்துக் கட்டியது அம்பலம்…!
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், பனையக்குறிச்சி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் காக்கா என்கிற சுந்தர்ராஜ் (வயது 32). சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது திருவெறும்பூர், பொன்மலை, ஸ்ரீரங்கம், அரியமங்கலம், கோட்டை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. கழுத்தை வெட்டி கொலை செய்வது இவரது ஸ்டைல். இதனால், “கழுத்து வெட்டி காக்கா சுந்தர் ” என அடைமொழியுடன் வலம் வந்தார். ரவுடித்தனம் செய்து வந்த சுந்தர்ராஜ், அவ்வப்போது பெயிண்டிங் வேலைக்கும் சென்று வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு தனது சித்தப்பா வீட்டு மாடியில் உறங்கிக் கொண்டிருந்த சுந்தர்ராஜ், கழுத்து துண்டிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்த தகவலின் பேரில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார், டி.எஸ்.பி ஜாபர் சித்திக் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுந்தர்ராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட சுந்தர்ராஜ், அதே பகுதியைச் சேர்ந்த கணேசமூர்த்தி என்பவரின் தங்கையான பரிமளாவுடன் நான்கு ஆண்டுகளாக தகாத உறவில் இருந்து வந்துள்ளார். இதனை நிறுத்திக் கொள்ளுமாறு கணேசமூர்த்தி குடும்பத்தினர் பலமுறை சுந்தர் ராஜை கண்டித்துள்ளனர். ஆயினும் அவர் தகாத உறவை தொடர்ந்து வந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த கணேசமூர்த்தி, அவரது மகன்கள் மதி, வடிவேல் மற்றும் பரிமளாவின் மகன் மாரிமுத்து ஆகியோர் சேர்ந்து சுந்தர்ராஜை தலையை துண்டித்து கொலை செய்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து கணேசமூர்த்தி(47), மதி, வடிவேல்(25) ஆகிய மூவரையும் திருவெறும்பூர் போலீசார் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள பரிமளாவின் மகன் மாரிமுத்துவை(25) போலீசார் தேடி வருகின்றனர்.

Comments are closed.