தமிழக காவல் துறையில் எஸ்.பி.யாக பணியாற்றும் 28 அதிகாரிகளுக்கு ஐ.பி.எஸ். அந்தஸ்து வழங்கி ஏற்கனவே தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இந்நிலையில், அந்த 28 எஸ்.பி.களுக்கும் ஐ.பி.எஸ். அந்தஸ்து வழங்கியதற்கான ஆணையை மத்திய அரசு வெளியிட்டது. இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட ஆணையில் தமிழக காவல்துறையில் எஸ்பிக்களாக பணியாற்றும் ஈஸ்வரன், மணி, செல்வக்குமார், டாக்டர் சுதாகர், எஸ்.ஆர்.செந்தில்குமார், முத்தரசி, பரோஸ்கான் அப்துல்லா, ராமகிருஷ்ணன், சக்திவேல், நாகஜோதி, சுகுமாரன், ராஜராஜன், விமலா, சுரேஷ்குமார், பாஸ்கரன், சண்முக பிரியா, ஜெயக்குமார், மயில்வாகணன், ஜெயலட்சுமி, சுந்தர வடிவேல், உமையாள், எஸ்.சரவணன், டி.செந்தில்குமார், மகேந்திரன், சுப்புலட்சுமி, ராஜன், செல்வராஜ், ஸ்டாலின் ஆகியோர் ஐபிஎஸ் அந்தஸ்து பெறுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் குரூப் 1 மூலம் டி.எஸ்.பி.க்களாக பணியில் சேருகிறவர்கள் பதவி மூப்பு அடிப்படையில் எஸ்.பி.க்களாக பணியாற்றும்போது அவர்களுக்கு குறிப்பிட்ட ஆண்டுகளில் ஐ.பி.எஸ். அந்தஸ்து வழங்கப்படும். ஒவ்வோர் ஆண்டும் மாநிலங்களுக்கு யு.பி.எஸ்.சி. மூலம் தேர்வாகி ஐ.பி.எஸ். அதிகாரிகளாக நியமிக்கப்படுகிறவர்களைப் போல, ஒவ்வொரு ஆண்டும் தமிழக அதிகாரிகளுக்கும் ஐ.பி.எஸ். அந்தஸ்து வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.