அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் சபரிமலை அன்னதானத்திற்கு 27 டன் உணவு பொருட்கள்…
2 லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டது..
அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில், சபரிமலையில் நடக்கும் மண்டல பூஜை மற்றும் மகர விழா காலங்களில் கார்த்திகை முதல் தேதி முதல் 64 நாட்கள் அன்னதானம் நடைபெற்று வருகிறது. இதில் திருச்சி மாவட்ட அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் கடந்த 26 ஆண்டுகளாக அன்னதானம் செய்யப்பட்டு வருகிறது. அதேபோல, இந்த ஆண்டும் பெருவழியில் வரும் பக்தர்களுக்காக எருமேலி, அழுதை, கரிமலை, பெரியானைவட்டம் போன்ற இடங்களில் அன்னதானம் செய்யப்படுகிறது. மேலும் சபரிமலை மற்றும் பம்பையில் வரிசையில் பல மணி நேரம் காத்து நிற்கும் பக்தர்களுக்கு பிஸ்கட் பாக்கெட் அளிக்கப்பட உள்ளது.
சபரிமலையில் அன்னதானம் செய்ய 40 பேர் கொண்ட குழுவினர் ஸ்ரீரங்கத்தில் இருந்து 14 டன் பிஸ்கட், 13 டன் மளிகை பொருட்கள் என 27 டன் உணவு பொருட்களுடன் 2 லாரிகளில் நேற்று புறப்பட்டனர். அகில பாரத ஐயப்ப சேவா சங்க மாவட்டதலைவர் புரவலர் ரமேஷ், சேவா சங்க புரவலர் முரளி ஆகியோர் கொடியசைத்து 2 லாரிகளையும் அனுப்பி வைத்தனர். அப்போது கே.ஆர்.டி. வெங்கடேஷ், கோபால கிருஷ்ணன், கௌரவதலைவர் சபரிதாசன், மாவட்ட செயலாளர் ஸ்ரீதர், பொருளாளர் சுரேஷ், அலுவலக செயலாளர் அம்சராம் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.