உரிமை கோரப்படாத 258 வாகனங்கள் ஜூலை 15-ம் தேதி பொது ஏலம்… * திருச்சி சிட்டி போலீஸ் கமிஷனர் காமினி தகவல்…!
திருச்சி மாநகரக் காவல் துறை சார்பில் அண்மை காலங்களில் மேற்கொள்ளப்பட்ட வாகனச் சோதனையின்போது, சந்தேகத்தின்பேரில் பறிமுதல் செய்யப்பட்ட
251 இருசக்கர வாகனங்கள், 2 நான்கு சக்கர வாகனங்கள், ஒரு ஆட்டோ , 4 சைக்கிள்கள் என மொத்தம் 258 வாகனங்கள் உரிமை கோரப்படாமல் உள்ளன. இந்த வாகனங்களின் பொது ஏலம் திருச்சி மாநகர ஆயுதப்படை மைதானத்தில் ஜூலை 15-ம் தேதி நடைபெறுகிறது. இந்த வாகனங்களை ஏலம் எடுக்க விரும்புவோர் ஆயுதப்படை வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை ஜூலை 11 காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பார்வையிடலாம். ஏலம் எடுக்க விரும்புவோர் ஏல நாள் அன்று காலை 8 மணி முதல் 10 மணிக்குள் ஆதார் அட்டையுடன் ரூ.5 ஆயிரம் செலுத்தி தங்களது பெயர்களை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். ஏலம் எடுத்தவுடன் ஏலத்தொகையுடன் நான்கு சக்கர வாகனத்துக்கு 18 சதவீத ஜிஎஸ்டியும், இருசக்கர வாகனத்துக்கு 12 சதவீத ஜிஎஸ்டியும் செலுத்தி வாகனத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்று மாநகரக் காவல் ஆணையர் என். காமினி தெரிவித்துள்ளார்.
Comments are closed.