Rock Fort Times
Online News

திருச்சியில் விஷ வண்டு கடித்து 25 பேர் காயம்

திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள எட்டரை கிராமத்தில் உள்ள வயல்களில் மல்லிகை பூ , செவ்வந்தி பூ உள்ளிட்ட பூ வகைகளை பயிர் இடுவது வழக்கம். அதே போன்று  எட்டரை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வீரமலை என்பவர் தனக்கு  சொந்தமான  ஒரு ஏக்கர் பரப்பளவு உள்ள வயலில் மல்லிகைப்பூ பயிரிட்டுள்ளார். அதனை 10 க்கும் மேற்பட்ட பெண்களைக் கொண்டு  பறித்துள்ளார். அதே போல   அதே பகுதியைச் சேர்ந்த அங்காண்டி என்பவரும் தனது வயலில் மல்லிகை பூ பயிரிட்டுள்ளார். அவரும் பத்திற்கும்  மேற்பட்ட பெண்களைக் கொண்டு பூப்பறித்துள்ளார். அப்போது   கூட்டமாக வந்த விஷ வண்டுகள் பூ பறித்துக் கொண்டிருந்த அஞ்சுகம், சின்ன பொண்ணு, வளர்மதி, மலர், மூர்த்தி, ராஜா, முருகாயி, செல்வி உள்பட 25க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்களை கடித்தது. அவா்களை  அனைவரும் குழுமணி ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சோமரசம்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டனா் . இச்சம்பவத்தால் கிராம மக்கள் வயலுக்குச் செல்ல அஞ்சுகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்