Rock Fort Times
Online News

2024-ல் 24 நாட்கள் பொது விடுமுறை- அறிவித்தது தமிழக அரசு …

வருகிற 2024-ம் ஆண்டு 24 நாட்களை பொது விடுமுறையாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. எந்தெந்த நாட்கள் விடுமுறை என்ற பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ் புத்தாண்டு மற்றும் மகாவீரர் ஜெயந்தி விடுமுறை, ஞாயிற்று கிழமைகளில் வருகிறது.

ஜனவரி 1ம் தேதி ஆங்கில புத்தாண்டு – திங்கள்
ஜனவரி 15ம் தேதி பொங்கல் – திங்கள்
ஜனவரி 16ம் தேதி , திருவள்ளுவர் தினம் – செவ்வாய்
ஜனவரி 17ம் தேதி உழவர் திருநாள் – புதன்
ஜனவரி 25ம் தேதி தைப்பூசம் – வியாழன்
ஜனவரி 26ம் தேதி குடியரசு தினம் – வியாழன்

மார்ச் 29ம் தேதி புனித வெள்ளி – வெள்ளி
ஏப்ரல் 1ம் தேதி வங்கி ஆண்டு கணக்கு முடிவு – திங்கள் (வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை)
ஏப்ரல் 9ம் தேதி தெலுங்கு வருட பிறப்பு – செவ்வாய்
ஏப்ரல் 14ம் தேதி தமிழ் வருட பிறப்பு – ஞாயிறு
ஏப்ரல் 21 மகாவீர் ஜெயந்தி – ஞாயிறு
மே 1ம் தேதி மேதினம் – புதன்
ஜூன் 16ம் தேதி பக்ரீத் – திங்கள்
ஜூலை 17ம் தேதி மொகரம் – புதன்
ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினம் – வியாழன்
செப்டம்பர் 7ம் தேதி விநாயகர் சதுர்த்தி – சனி
செப்டம்பர் 16ம் தேதி மிலாடி நபி – திங்கள்
அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி – புதன்
அக்டோபர் 11ம் தேதி ஆயுத பூஜை – வெள்ளி
அக்டோபர் 12ம் தேதி விஜய தசமி – சனி
அக்டோபர் 31ம் தேதி தீபாவளி – வியாழன்
டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் – புதன்
ஆகிய 24 நாட்கள் பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்