Rock Fort Times
Online News

சுதந்திர தின விழாவையொட்டி தமிழகத்தைச் சேர்ந்த 23 போலீஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பதக்கம்…!

சுதந்திர தினத்தையொட்டி, தமிழகத்தைச் சேர்ந்த 23 போலீஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.  தேசிய அளவில் சிறப்பாக பணியாற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விருது வழங்கப்படுகிறது. இந்த விருதானது, செயல்பாடுகள், சாதனைகள் மற்றும் நன்மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் வழங்கப்படுகிறது.  அந்தவகையில் இந்த ஆண்டுக்கான ஜனாதிபதி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், தமிழகத்தைச் சேர்ந்த 23 போலீஸ் அதிகாரிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

அவர்கள் பெயர் விவரம் வருமாறு:
1. வன்னிய பெருமாள் – காவல் இயக்குநர்

2. அபின் தினேஷ் மோதக் – கூடுதல் இயக்குநர்
3.  கண்ணன் – ஐ.ஜி.

4. பாபு – ஐ.ஜி.
5. பிரவீன்குமார் – போலீஸ் கமிஷனர்

6. பெரோஸ்கான் அப்துல்லா – எஸ்.பி.
7. சுரேஷ்குமார் – எஸ்.பி.

8. கிங்ஸ்லின் – எஸ்.பி.,
9. ஷியமளா தேவி – எஸ்.பி.,
10. பிரபாகர் – எஸ்.பி.
11. பாலாஜி சரவணன் – எஸ்.பி.,
12.  ராதாகிருஷ்ணன் – ஏ.எஸ்.பி.,
13. சந்திரசேகர் – இன்ஸ்பெக்டர்
14. டில்லிபாபு – டி.எஸ்.பி.,
15. மனோகரன் – டி.எஸ்.பி.,
16. சங்கு – டி.எஸ்.பி.,
17. ஸ்டீபன் – ஏ.எஸ்.பி.,
18. சந்திரமோகன் – இன்ஸ்பெக்டர்
19. ஹரிபாபு – இன்ஸ்பெக்டர்
20. தமிழ்ச்செல்வி – இன்ஸ்பெக்டர்
21. முரளி – எஸ்.ஐ.,
22. ரவிச்சந்திரன் – எஸ்.ஐ.,
23. முரளிதரன் -எஸ்.ஐ.
வன்னியபெருமாள், அபின் தினேஷ் மோதக் ஆகிய இருவருக்கு சிறப்புமிக்க சேவைக்கான குடியரசுத் தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருக்கும் புதுடெல்லி செங்கோட்டையில் ஆகஸ்ட் 15ம் தேதி நடைபெற உள்ள சுதந்திர தின விழாவில் பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட உள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்