Rock Fort Times
Online News

திருச்சி-சென்னை பைபாஸ் சாலையில் லாரி டிரைவரை மிரட்டி பணம், செல்போன் பறித்த 2 திருநங்கைகள் கைது…!

ஈரோடு மாவட்டம், கதிராம்பட்டியை சேர்ந்தவர் சந்தானம் (வயது 44). லாரி டிரைவர். இவர் சம்பவத்தன்று திருச்சி-சென்னை பைபாஸ் சாலையில் ஒரு உணவகம் அருகில் லாரியை நிறுத்திவிட்டு ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 திருநங்கைகள் சந்தானத்தை மிரட்டி அவரிடமிருந்து 32 ஆயிரம் பணம் மற்றும் செல்போனை பறித்துக் கொண்டு அங்கிருந்து ஓடி விட்டனர். இதுகுறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் சந்தானம் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்தப் பகுதியில் சுற்றிதிரிந்த 2 திருநங்கைகளை பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர்கள் திருவானைக்காவல் சோதனைசாவடி பகுதியை சேர்ந்த திரிஷா (20), ஹர்ஷினி (23) என்பதும், லாரி டிரைவரை மிரட்டி பணம், செல்போன் பறித்ததை ஒப்புக்கொண்டனர்.
அதன்பேரில் போலீசார் 2 திருநங்கைகளையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 32 ஆயிரம் பணம் மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர்.

Friends கூட Happy - கிளிக்..

1 of 931

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்