ஜம்மு காஷ்மீரில் நேரிட்ட குண்டு வெடிப்பில் ராணுவ வீரர்கள் இருவர் வீர மரணம் அடைந்தனர். ஜம்மு காஷ்மீர் அக்னுார் பகுதியில் அமைந்துள்ள எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. கேப்டன் கே.எஸ்.பக்சி, நாயக் முகேஷ் ஆகிய இருவரும் குண்டு வெடிப்பில் பலியாகி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவ இடத்தில் கூடுதலாக ராணுவம், துணை ராணுவப்படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்திய ராணுவத்தின் ஒயிட் நைட் கார்ப்ஸ் படைப்பிரிவினர், வீரர்கள் உயிரிழந்த தகவலை உறுதி செய்துள்ளனர். ‘நாட்டுக்காக தங்கள் உயிரை தியாகம் செய்துள்ள வீரர்கள் இருவருக்கும் தலைவணங்கி மரியாதை செலுத்துவதாக’ ஒயிட் நைட்ஸ் படைப்பிரிவு தெரிவித்துள்ளது.
Comments are closed.