Rock Fort Times
Online News

ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 2 பவுன் நகை திருட்டு…  

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் சித்திரைகுடி மாதா கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் வானத்துராஜ். இவரது மனைவி சர்மிளா (வயது 30). இவர் நகை வாங்குவதற்காக லால்குடிக்கு வந்தார். பின்னர் ஒரு நகைக்கடையில் 2 பவுன் நகையை வாங்கி அதனை தனது கைபையில் வைத்து கொண்டு தஞ்சாவூர் பஸ்சில் சென்று கொண்டிருந்தார். லால்குடியில் இருந்து மணக்கால் அருகே பஸ் சென்றபோது கைப்பையில் வைத்திருந்த நகையை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். மர்ம ஆசாமிகள் கைப்பையை லாவகமாக திறந்து நகையை திருடி உள்ளனர். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில், லால்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்