Rock Fort Times
Online News

பாஸ்போர்ட்டில் திருத்தம் செய்து விமானத்தில் பயணம் செய்த 2 பேர் சிக்கினர் …

ஓமன் நாட்டில் இருந்து திருச்சிக்கு ஒரு விமானம் வந்தடைந்தது. அதில் வந்த பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை விமான நிலைய அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு பயணியின் பாஸ்போர்ட்டில் அவர் பெயர் முத்துசாமி (வயது 51) அரியலூர் மாவட்டம் செம்மந்தகுடி கருப்பூர் என்று இருந்தது. அவர் மேல் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை நடத்திய போது அவருடைய உண்மையான பெயர் பரமசிவம் ( 51) என்பது தெரிய வந்தது.
இதையடுத்து அவர் ஏர்போர்ட் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். இதேபோல, ஓமன் நாட்டிலிருந்து நேற்று முன்தினம் விமானத்தில் திருச்சிக்கு வந்த மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த கார்த்திக்(27) என்பவர் தனது பாஸ்போர்ட்டில் திருத்தம் செய்திருந்தது கண்டறியப்பட்டது. அவரும் ஏர்போர்ட் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். அவர்கள் 2 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து துறை ரீதியான நடவடிக்கை மேற்கொண்டனர்.

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்