திருச்சி, எடமலைப்பட்டிபுதூர் ஆர்.எம்.எஸ். காலனியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் வீரபாண்டி (வயது 20 ). இவர் தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். பின்னர் வந்து பார்த்தபோது இருசக்கர வாகனத்தை காணவில்லை. இதுகுறித்து எடமலைப்பட்டிபுதூர் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அன்புச்செல்வி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி இருசக்கர வாகனத்தை திருடியதாக 17 வயது சிறுவன் மற்றும் எடமலைப்பட்டிபுதூரை சேர்ந்த சஞ்சய் ஆகிய இரண்டு பேரை கைது செய்தார். சஞ்சய் சிறையில் அடைக்கப்பட்டார். 17 வயதான சிறுவன் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டான். அவர்களிடமிருந்து இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வரும் கே.கே.நகரை சேர்ந்த அசோக் என்பவரின் இருசக்கர வாகனமும் திருடு போய்விட்டது. இதுகுறித்து கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.