திருச்சி பாலக்கரை இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையில் போலீசார் வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவருடைய ரோந்து வாகனம் பெல்ஸ் கிரவுண்ட் ரெயில்வே குடியிருப்பு பகுதியில் வந்த போது அங்கு ஒரு ஆட்டோ நின்றுகொண்டு இருந்தது. அதில் சிலர் அமர்ந்து இருந்தனர். அவர்கள் மீது இன்ஸ்பெக்டர் பெரியசாமிக்கு சந்தேகம் ஏற்படவே அவர்களை விசாரணைக்காக அழைத்த போது போலீசாரை கண்டதும் ஆட்டோவில் இருந்து 6 பேர் கீழே இறங்கி தப்பி ஓடினர். உடனே போலீசார் அவர்களை விரட்டி சென்றனர். அவர்களில் 2 பேர் பிடிபட்டனர். மற்ற 4 பேர் தப்பி ஓடிவிட்டனர். அவர்கள் 2 பேரிடமும் விசாரித்தபோது அவர்கள் திருச்சி பாலக்கரை கீழப்புதூர் பகுதியை சேர்ந்த விஜய் (வயது 27), அதே பகுதியை சேர்ந்த அஜித் ( 23)என்பது தெரிய வந்தது. மேலும்,
தப்பி ஓடியவர்கள் விஜய் பாபு, அகஸ்டின், மகேந்திரன், தேவா என்பதும், அவர்கள் கூட்டாக கொள்ளையடிக்க திட்டமிட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து அரிவாள், கத்தி, மிளகாய் பொடி பாக்கெட், கயிறு போன்றவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், தப்பி ஓடிய நான்கு பேரை வலை வீசி தேடி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.