Rock Fort Times
Online News

கீழ அன்பிலில் ரூ.36.50 லட்சத்தில் 2 புதிய வகுப்பறை கட்டிடங்கள்…

சவுந்தரபாண்டியன் எம்.எல்.ஏ.திறந்து வைத்தார்..

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கீழ அன்பில் ஊராட்சியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் லால்குடி எம்.எல்.ஏ.சௌந்தரபாண்டியன் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.36.50 லட்சம் மதிப்பில் இரண்டு புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டது. இந்த புதிய வகுப்பறை கட்டிடங்களை எம்.எல்.ஏ. சௌந்தரபாண்டியன் இன்று ( 20.10.2023 ) திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஜங்கமராஜபுரம் தலைவர் வீரமணி, கீழ அன்பில் தலைவர் சுதா சித்திரசேனன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் சௌந்தரராஜன், ராஜ்மோகன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அசோக்குமார், திமுக நிர்வாகிகள், கிராம பொதுமக்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்