தமிழகத்தில் இந்தி மொழி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்து உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு திமுக சார்பில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி இன்று(25-01-2024) மாலை நடந்தது. இதனை முன்னிட்டு திருச்சி கோஹினூர் சிக்னலில் இருந்து அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அமைதி ஊர்வலமாக வந்து திருச்சி உழவர் சந்தை மைதானம் அருகே உள்ள மொழிப்போர் தியாகிகள் கீழப்பழூர் சின்னசாமியின் நினைவிடத்திலும், விராலிமலை சண்முகம் நினைவிடத்திலும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி தமிழ் மொழியை பாதுகாக்க உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்நிகழ்வில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, முசிறி சட்டமன்ற உறுப்பினர் தியாகராஜன் , துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார், கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், மணச்சநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கதிரவன், திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், திமுக மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.