Rock Fort Times
Online News

விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து முக்கிய நிர்வாகிகள் 2 பேர் சஸ்பெண்ட்…- திருமாவளவன் நடவடிக்கை!

நிலவுரிமை மீட்பு இயக்க மாநில துணைச் செயலாளர் பொறுப்பில் இருந்து அ.ப. மூர்த்தி, திருவண்ணாமலை தெற்கு மாவட்ட நகர பொறுப்பாளர் ஆர்.கே. அருண் ஆகிய இருவரும் கட்சியில் இருந்து இடைநீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், நிலவுரிமை மீட்பு இயக்க மாநில துணைச் செயலாளர் அ.ப.மூர்த்தி மற்றும் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட நகர பொறுப்பாளர் ஆர்.கே.அருண் ஆகிய இருவர் மீதும் மாவட்டச் செயலாளர் ச.நியூட்டன் அளித்த புகார் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அ.ப.மூர்த்தி தொடர்ந்து கட்சிக் கட்டுப்பாடுகளை மீறி சமூக ஊடகங்களில் கட்சியின் நன்மதிப்புக்கு ஊறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வருவது தெரிய வருகிறது. எனவே, அவர் 6 மாத காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்படுகிறார். இதேபோல் கட்சியின் நலன்களுக்கு எதிராக செயல்படும் ஆர்.கே.அருணும் 6 மாத காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்படுகிறார். இதுகுறித்து இருவரும் கட்சித் தலைமையிடம் 2 வார காலத்துக்குள் மேல்முறையீடு செய்யலாம்’ இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்