திருச்சி ஜீயபுரம் அருகே முக்கொம்பு சுற்றுலா மையம் உள்ளது. இங்கு புத்தூர் பிஷப் ஹீபா் கல்லூரியின் விடுதியில் தங்கி மூன்றாம் ஆண்டு பிசிஏ படிக்கும் , திண்டுக்கல் மாவட்டத்தை சோ்ந்த நாகராஜ் மகன் லோகேஷ் ( வயது 20) , கள்ளக்குறிச்சியை சோ்ந்த செந்தில்குமாா் மகன் ஜனாா்த்தனன் (20) ஆகியோர் இன்று ( 05.08.2023 ) வந்தனர். பின்னர் அவர்கள், சுற்றுலா மையத்தை சுற்றிப் பார்த்தனர். அதனைத் தொடர்ந்து அங்குள்ள ஆற்றில் சந்தோஷமாக குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் திடீரென நீரில் மூழ்கினர். அருகில் உள்ளவர்கள் இதனை பார்த்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் தீயணைப்பு துறை மாவட்ட உதவி அலுவலா் சத்தியவா்த்தனன் தலைமையில் 6 போ் கொண்ட மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். அவர்களில் ஒரு மாணவர் பிணமாக மீட்கப்பட்டார். மற்றொரு மாணவரின் உடலை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.


Comments are closed, but trackbacks and pingbacks are open.