Rock Fort Times
Online News

திருச்சி மாண்ட்போர்ட் பள்ளியில் 18-வது பெற்றோர் தினவிழா…

திருச்சி காட்டூர் மாண்ட்போர்ட் பள்ளியின் 18-வது பெற்றோர் தினவிழா 12-ம் தேதி மற்றும் 13-ம் தேதி ஆகிய
2 நாட்கள் நடைபெற்றன. விழாவில், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். முதல் நாள் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொழிலதிபர், சமூக ஆர்வலர் மற்றும் நடிகை மும்பையை சேர்ந்த ஸ்வேதா.ஏ.சௌத்ரி, தஞ்சாவூர் பிளாசம் பப்ளிக் ஸ்கூல் நிறுவனர் அழகு அழகப்பன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். அப்போது அழகு அழகப்பன், பெற்றோர்களின் மகத்தான சேவையை பாராட்டி பேசியதோடு அவர்களை முன்னுதாரணமாக்கி வலுவான இந்தியாவை உருவாக்க மாணவர்கள் பங்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.ஸ்வேதா. ஏ.சௌத்ரி பேசுகையில், கற்றல் ஒருபோதும் நிற்காது.
இந்தியாவை பெருமைப்படுத்த வேண்டும் என்ற கனவை மாணவர்கள் கொண்டிருக்க வேண்டும், அதை நிறைவேற்ற பெற்றோர்கள் கடமையாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 13-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கர்நாடகாவைச் சேர்ந்த நித்தி சந்தோஷ் ஹெக்டே, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் செல்வம் மருதமுத்து ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள்.
பின்னர், போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் அரசு பொதுத்தேர்வு 2022-2023 கல்வியாண்டில் பள்ளி அளவில் முதல் மதிப்பெண்கள் பெற்ற பனிரென்டாம் வகுப்பு மாணவி அர்பனா மார்சினா, பத்தாம் வகுப்பு மாணவி இனியா மற்றும் மாணவர் ஆலன் ஜோஸ்வா ஆகியோருக்கு சிறப்பு பரிசுகளையும், மற்றும் ரொக்கப் பரிசுகளையும் வழங்கினார்கள். அப்போது துணைவேந்தர் பேசுகையில், வாய்மையே வெல்லும் என்பதனை மாணவர்கள் மனதில் கொள்ள வேண்டும். ஞானத்தை பெறுவதில் மாண்ட்போர்ட் மாணவர்கள் முயல வேண்டும். தொடக்க கல்வியே உயர் கல்விக்கு அடிப்படையாக இருக்கிறது.
பள்ளிக் கல்வியே மாணவர்களின் நடத்தைக்கும், ஒழுக்கத்திற்கும் அடிப்படையாக அமைகிறது. பாருக்குள்ளே நல்ல நாடு நம் பாரத நாடு” என்பதனை மனதில் நிறுத்தி, பாரதியின் கனவையும், பாரதிதாசனின் கனவையும் நனவாக்க வேண்டும் என்று பேசினார்.

முன்னாள் நீதிபதி நித்தி சந்தோஷ் ஹெக்டே பேசுகையில், இன்றைய சமுதாயம் பணத்தையும், பதவியையும் மட்டுமே நம்பிக் கொண்டிருக்கிறது. ஏழை மக்களையும், அடித்தட்டு மக்களையும் கருத்தில் கொள்வதில்லை. இந்நிலை மாற மாணவர்கள் முயற்சி செய்ய வேண்டும். மாணவர்களின் எதிர்காலம் இந்த சமுதாயத்தையே நம்பி இருக்கிறது. அதனால், மாணவர்களாகிய நீங்கள் இச்சமுதாய அவலங்களை சீர்திருத்தும் வகையில் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். முன்னதாக மாண்ட்போர்ட் பள்ளியின் மாணவ மாணவிகள் சாக்க்ஷி, தேவ ஹன்சிகா, தன்ஷிகா, அஹயன், மற்றும் ஆண்ட்ரூ ஜோயல் ஆகியோர் வரவேற்புரையாற்றினார்கள். மேலும், இவ்விழாவில் மாணவர்களின் ஒழுக்கம் சார்ந்த நல்வழிபண்புகள் குறித்த கலைநிகழ்ச்சிகளான பாட்டு, இன்னிசை, நாட்டியம், நாடகங்கள் என அனைத்து நிகழ்வுகளும் மாணவ-மாணவிகளால் மிகபிரமாண்டமான மேடையில் சிறப்பாக நடத்தப்பட்டது. நிகழ்ச்சியின் நிறைவாக “பணத்தை வென்ற பாசம்” என்னும் தமிழ் நாடகம், 200 மாணவர்கள் கலந்து கொண்ட மேற்கத்திய நடனம் கருத்து நிறைந்ததாகவும் கண்ணை கவரும் விதமாகவும் இருந்தது. இறுதியில், மாணவ பிரதிநிதிகளான ஸ்ரேயா ஹரிஷ், ஸ்வாஷ்திகா, வி.கே. ரஹ்மான்கான் மற்றும் என்ரிக் செர்வின் ஆகியோர் நன்றி கூறினர்

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்