ஓடிடி தளங்களில் ஆபாச காட்சிகள் ஒளிபரப்பப்படுவதாக புகார்கள் சென்ற வண்ணம் இருந்தன. பொதுமக்கள் அளித்த புகார்களின் அடிப்படையில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தீவிரமாக கண்காணித்து வந்தது. இந்தநிலையில் ஆபாச காட்சிகளை ஒளிபரப்பி வந்த 18 ஓடிடி தளங்கள் மற்றும் 19 இணைய தளங்களை மத்திய தகவல் ஒளி பரப்புத்துறை முடக்கி உள்ளது. இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆபாச காட்சிகளை ஒளிபரப்பி வந்த 10 செயலிகள் மற்றும் 57 வலைதள கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ஆபாச காட்சிகளை ஒளிபரப்பி வந்த 18 ஓடிடி தளங்கள் மற்றும் 19 இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன. மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் பலமுறை விடுத்த எச்சரிக்கைகளை பொருட்படுத்தாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. முடக்கப்பட்ட சமூக வலைதளங்களை மட்டும் 32 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடர்ந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded
Comments are closed, but trackbacks and pingbacks are open.