மிரட்டும் புயல்: திருச்சி மாவட்டத்தில் தயார் நிலையில் 154 பாதுகாப்பு மையங்கள்…* அவசர அழைப்புக்கு டெலிபோன் எண்களும் அறிவிப்பு!
இலங்கை அருகே நிலவிவரும் “டிட்வா” புயல், வட தமிழக கடலோரப் பகுதிகளை நாளை(நவ. 29) நெருங்கி வரக்கூடும். இதன் காரணமாக செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மிதமானது முதல் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாகவும், தமிழக முதல்- அமைச்சரின் உத்தரவின் பேரிலும் திருச்சியில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “டிட்வா” புயல் காரணமாக திருச்சி மாவட்டத்திற்கு கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே, காவிரி கரையோர கிராமங்களில் உள்ள மக்கள் மற்றும் சலவைத் தொழிலாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். புயல், மழை ஏற்படும் போது பொதுமக்களை தங்க வைக்க ஏதுவாக 154 பாதுகாப்பான மையங்கள் தயார் நிலையில் உள்ளன. திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் அவசர கட்டுப்பாட்டு அறை செயல்பாட்டில் உள்ளது. இக்கட்டுப்பாட்டு அறையை 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கோ அல்லது 0431 2418995 என்ற எண்ணிற்கோ பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். மேலும், வட்டாட்சியர் அலுவலகங்களில் செயல்படும் கட்டுப்பாடடு அறைக்கோ அல்லது வட்டாட்சியர்களின் அலைபேசி எண்ணிற்கோ பொதுமக்கள் புகார்களை தெரிவிக்கலாம். அதன்படி திருச்சி கிழக்கு 0431 2711602, 94454 61808, திருச்சி மேற்கு 0431 241040, 94450 00602, திருவெறும்பூர் 0431 2555542, 78258 73784, ஸ்ரீரங்கம் 0431 2230871, 94450 00603, மணப்பாறை 04332 260576, 94450 00604, மருங்காபுரி 04332 299381, 94454 61805, லால்குடி 0431 2541233, 94450 00605, மண்ணச்சநல்லூர் 0431 2561791, 94450 00606, முசிறி 04326 260226, 94450 00607, துறையூர் 04327 222393, 94450 00609, தொட்டியம் 04326 254409, 94450 00608 ஆகிய எண்ணிகளில் தெரிவிக்கலாம். புயல், மழையின் போது ஆறு, குளம் உள்ளிட்ட நீர் நிலைகளில் குழந்தைகள் செல்லாத வண்ணம் கவனமாக இருக்குமாறு பெற்றோர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வானிலை தொடர்பான தகவல்களை “TN-Alert APP” மற்றும் “SACHET APP”ஆகியவற்றின் மூலமும் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.