சிங்கப்பூரிலிருந்து தனியார் விமானம் ஒன்று இன்று திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்தது. அதில் வந்த பயணிகளின் உடைமைகளை விமான நிலைய அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஆண் பயணி ஒருவர் மீது சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனை இட்டனர். அப்போது அவர் தனது உடலில் மறைத்து தங்கத்தை கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. அவர் 260 கிராம் தங்கத்தை கடத்தி வந்தார். அவற்றின் இந்திய மதிப்பு ரூ. 15 லட்சத்து 47 ஆயிரம் ஆகும். அந்தத் தங்கத்தை அவரிடம் கொடுத்து அனுப்பியது யார்?, அந்த தங்கத்தை யாரிடம் கொடுக்க சொன்னார்கள் என்பது குறித்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.