திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி, திருச்சி மாநகரில் உள்ள போலீஸ் நிலையங்களில் பணியாற்றி வந்த 14 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். அதன்படி, பொன்மலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய கிரேசி தமிழ்ச்செல்வி கண்டோன் மெண்டுக்கும், உறையூரில் பணியாற்றிய பாத்திமா பொன்மலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கும், தீவிர குற்றப்பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் ஜோதிராமலிங்கம் பாலக்கரைக்கும், பொன்மலை குற்றப்பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் அன்பு செல்வி கண்டோன் மெண்ட் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கும், பாலக்கரை சட்டம்- ஒழுங்கு சப்- இன்ஸ்பெக்டர் ராஜா கோபால் பொன்மலை குற்றப்பிரிவுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், கண்டோன் மெண்ட் குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் உமாசங்கரி மதுவிலக்கு அமலாக்க பிரிவுக்கும், அங்கு பணியாற்றிய ராஜ ராஜேஸ்வரி ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கும், ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் இந்திரா காந்தி கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கும், கே.கே.நகர் சட்டம்,ஒழுங்கு சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் கட்டுப்பாட்டு அறை க்கும், பாலக்கரை குற்றப்பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் சட்டநாதன் காந்தி மார்க்கெட்டுக்கும், அரசு மருத்துவமனை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் கண் டோன்மெண்ட்க்கும், கே.கே.நகர் சப்- இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் ஸ்ரீரங்கத்திற்கும், கண்டோன்மெண்ட் சப்-இன்ஸ்பெக்டர் சுபன் ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவுக்கும், எடமலைப்பட்டிபுதூர் சப்-இன்ஸ்பெக்டர் மாதவன் கோட்டைக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்
Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded
Comments are closed, but trackbacks and pingbacks are open.