Rock Fort Times
Online News

தமிழகத்தில் 13 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்…

தமிழக பொதுத்துறை செயலர் கே.நந்தகுமார் உட்பட 13 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்ட உத்தரவில்., தமிழக பிற்படுத்தப்பட்டோர், நலத்துறை செயலர் ரீட்டா ஹரீஷ் தாக்கர், பொதுத்துறை செயலராகவும், அப்பதவியில் இருந்த கே.நந்தகுமார், மனிதவள மேலாண்மைத்துறை செயலராகவும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலர் எஸ்.நாகராஜன், நிதித்துறை செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். விடுப்பில் இருந்து பணிக்கு திரும்பியுள்ள சிஜிதாமஸ் வைத்யன் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலராகவும், தமிழ்நாடு வீட்டுவசதித்துறை மேலாண் இயக்குநர் இ.சரவணவேல்ராஜ், புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையராகவும், சர்க்கரைத்துறை ஆணையர் சி.விஜயராஜ்குமார், பிற்படுத்தப்பட்டோர்,நலத்துறை செயலராகவும், சர்க்கரைத்துறை கூடுதல் ஆணையர் டி.அன்பழகன், சர்க்கரைத்துறை இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அன்பழகன் 16-வது நிதி ஆணையத்தின் சிறப்பு பணி அலுவலராகவும் செயல்படுவார். சென்னை மாநகராட்சியின் பணிகள் பிரிவு இணை ஆணையர் ஜி.எஸ்.சமீரன், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய மேலாண் இயக்குநராகவும், ஈரோடு மாநகராட்சி ஆணையர் வி.சிவகிருஷ்ணமூர்த்தி, சென்னை;மாநகராட்சியின் பணிகள் பிரிவு துணைஆணையராகவும், புவியியல், சுரங்கத்துறை ஆணையர் பூஜா குல்கர்ணி, தமிழ்நாடு கட்டமைப்பு மேம்பாட்டு கழகத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். சேலம் கூடுதல் ஆட்சியர் மற்றும் டி.ஆர்.டி.ஓ திட்ட அதிகாரியான பி.அலர்மேல்மங்கை, தமிழ்நாடு வழிகாட்டி நிறுவன செயல் இயக்குநராகவும், சேலம் சாகோசர்வ் மேலாண் இயக்குநர் லலித் ஆதித்யா நீலம், சேலம் கூடுதல் ஆட்சியர் மற்றும் டி.ஆர்.டி.ஓ திட்ட அதிகாரியாகவும் நியயிக்கப்பட்டுள்ளனர் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்