பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டல் கோரி இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள், தாங்கள் பயின்ற பள்ளி வாயிலாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் வழியாகவும் இன்று ( 09.05.2023 ) காலை 11 மணிமுதல் வரும் சனிக்கிழமை மாலை 5 மணிவரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.