Rock Fort Times
Online News

சாலை விதிகளை பின்பற்றாத 12 வாகனங்கள் பறிமுதல்…! போக்குவரத்து அதிகாரி அதிரடி..

சாலை விதிமுறைகளை பின்பற்றாமலும் உாிய முறையில் லைசன்ஸ் இல்லாமலும் வாகனங்கள் குறிப்பாக பள்ளி வாகனங்கள் இயக்கப்படுவதாக மேலதிகாாிகளுக்கு புகாா்கள் சென்ற வண்ணம் இருந்தன. அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் தலைமையில் வாகன தணிக்கை செய்யப்பட்டு, சாலை விதிமுறைகளை பின்பற்றாத வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. அதேபோல திருச்சி திருவெறும்பூர் மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் திருவெறும்பூர் பகுதியில் வாகன தணிக்கை செய்யப்பட்டது. அப்போது பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்ல சரியான விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? டிரைவர் முறையான லைசன்ஸ் பெற்றுள்ளாரா? என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது சாலை விதிமுறைகளை பின்பற்றாத 12 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த வாகனங்களின் டிரைவா்கள் மீது மேல் நடவடிக்கை எடுக்க பாிந்துரைக்கப்பட்டது. மேலும், இதுபோன்று வாகன தணிக்கை தொடா்ந்து நடைபெறும் என்றும், உரிய ஆவணங்கள் இல்லாமல் பாதுகாப்பு குறைபாடுடன் இயக்கப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு அபராதம் விதிக்கப்படும் என செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்