திருச்சி, உறையூரில் நடந்து சென்ற மூதாட்டியிடம் 12 பவுன் நகை பறிப்பு…* மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் கைவரிசை..!
திருச்சி, குழுமணி ரோடு பாத்திமா நகர் பாலம் அருகே 67 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 3 பேர் மூதாட்டி கழுத்தில் அணிந்து இருந்த 12 பவுன் நகையை பறித்துக் கொண்டு அங்கிருந்து ஓடி விட்டனர். நகையை பறிகொடுத்த மூதாட்டி இதுகுறித்து உறையூர் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Comments are closed.