தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மாநில துணைத்தலைவரும், திருச்சி பாராளுமன்ற முன்னாள் உறுப்பினருமான எல்.அடைக்கலராஜின் 11-ஆம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி திருச்சி ஜென்னி பிளாசாவில் உள்ள எல்.அடைக்கலராஜ் சிலைக்கு இன்று ( 27.09.2023 ) காலை தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாக குழு உறுப்பினர் தொழிலதிபர் ஜோசப் லூயிஸ் தலைமையில் தொழிலதிபர்கள் ஜோசப் பிரான்சிஸ், வின்சென்ட் அடைக்கலராஜ், திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ஜவகர், முன்னாள் மாவட்ட தலைவர்கள் ஜெரோம் ஆரோக்கியராஜ், புள்ளம்பாடி ஜெயபிரகாஷ், மாநில பொதுச் செயலாளர்கள் வழக்கறிஞர் சரவணன், ஜிகே முரளி மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜேஷ் என்கிற சீனிவாசன், மாவட்ட பொருளாளர் ராஜாநசீர், ராஜகோபால், மாவட்ட துணைத் தலைவர்கள் பண்ணை கோபாலகிருஷ்ணன், வில்ஸ் முத்துக்குமார், கோட்டத் தலைவர்கள் சிவாஜி சண்முகம், ராஜா டேனியல் ராய், ஜோசப் ஜெரால்ட்’, பிரியங்கா பட்டேல், வட்டாரத் தலைவர் கள்ளிக்குடி சுந்தரம், சிறுபான்மை பிரிவு பஜார் மைதீன், மலைக்கோட்டை முரளி, உறையூர் எத்திராஜ் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.