தமிழ்நாட்டில் பல்வேறு முக்கிய துறைகளில் பணியாற்றி வந்த 11 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கோவை மாநகராட்சி ஆணையர் எம்.பிரதாப், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இணை நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா, திருவாரூர் மாவட்ட கூடுதல் ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நெல்லை மாநகராட்சி ஆணையராக தாக்கரே சுபம் நியமிக்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாநகராட்சி ஆணையராக இருந்த சிவகிருஷ்ணமூர்த்தி, ஈரோடு மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை மாநகராட்சி ஆணையராக இருந்த பிரவீன்குமார், சென்னை மாநகராட்சி மத்திய மண்டல துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆவடி மாநகராட்சி ஆணையர் கே.தர்பகராஜ், உயர்க்கல்வித்துறை துணைச் செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆவடி மாநகராட்சி ஆணையராக ஷேக் அப்துல் ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார். கடலூர் மாவட்ட கூடுதல் ஆட்சியராக இருந்த எல்.மதுபாலன், மதுரை மாநகராட்சி ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கோவை மாநகராட்சி ஆணையராக எம்.சிவகுரு பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். திண்டிவனம் சார் ஆட்சியர் கட்டா ரவி தேஜா, சென்னை மாநகராட்சி வடக்கு மண்டல துணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஓசூர் சார் ஆட்சியராக இருந்த ஆர்.சரண்யா- கடலூர் மாவட்ட கிராமப்புற மேம்பாட்டு ஏஜென்சி கூடுதல் ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.