வாட்ஸ்அப்பில் உள்ள டேட்டாக்களை பாதுகாப்பாக கையாள்வதில் வாட்ஸ்அப் நிறுவனத்தைவிட, அதிக பொறுப்பு பயனாளர்களுக்குதான் உள்ளது. இதை பயன்படுத்துவர்களின் பயன்பாட்டுக்காக ஒரு செல்போனில் ஒரே வாட்ஸ்அப் கணக்கு பயன்படுத்த மெட்டா நிறுவனம் அனுமதி அளித்துள்ளது. கம்ப்யூட்டர் லேப்டாப் ஆகியவற்றிலும் க்யூஆர் கோடை பயன்படுத்தி ஒரே வாட்ஸ்அப் கணக்கை உபயோகிக்கலாம்.
கணக்கை முறையாக லாக்அவுட் செய்யாமல் சிலர் விட்டுவிடுவதால், பிறர் அந்த தகவல்களை திருடும் அபாயம் உள்ளது. இதை தடுக்க இரண்டாவது கணக்கை பயன்படுத்தும்போது 6 இலக்க எண்ணை பதிவிடும் புதிய சேவையை வாட்ஸ்அப் கொண்டு வந்துள்ளது. முதல் கணக்கு பயன்பாடான செல்போனை தவிர லேப்டாப், கம்ப்யூட்டர் ஆகியவற்றில் வாட்ஸ்அப் கணக்கு பயன்படுத்தும்போது இந்த 6 இலக்க பாதுகாப்பு எண்ணை தேர்வு செய்துவிட்டால்போதும். கைப்பேசியை தவிர வேறு கம்ப்யூட்டர்களில் உங்கள் வாட்ஸ்அப் கணக்கை பயன்படுத்தினால்
6 இலக்க ரகசிய எண் கைபேசிக்கு வந்துவிடும். சரியான எண்களை உள்ளீடு செய்தால்தான் பிற
கணினிகளில் வாட்ஸ்அப் கணக்கை பயன்படுத்த முடியும். இந்த சேவையை பயன்படுத்தாமலும் இருக்க
அனுமதி உள்ளது. தற்போது பீட்டா பயன்பாட்டில் அளிக்கப்பட்டுள்ள இந்த புதிய சேவை விரைவில் அனைவருக்கும் வழங்கப்படவுள்ளது.