Rock Fort Times
Online News

துண்டான காலினை இணைத்து திருச்சி அட்லஸ் மருத்துவமனை சாதனை

டாக்டர் ஜெய்கிஷ் தலைமையிலான மருத்துவக்குழுவுக்கு பாராட்டு குவிகிறது

திருச்சி சத்திரம்பேருந்துநிலையம் அருகில் உள்ள வி.என்.நகரில் கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவருகிறது அட்லஸ் மருத்துவமனை. இங்கு எலும்புமுறிவு மூட்டுமாற்று சிகிச்சை மற்றும் தண்டுவடம் சார்ந்த பிரச்சனைகளுக்கு உலகத்தரத்தில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் துறையூரைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கணுக்காலுக்கு மேலே வெட்டப்பட்டு கால் துண்டான நிலையில், சிகிச்சைக்காக இங்கு அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது காலில் இரண்டு எலும்புகள் துண்டானதையும் இரத்த ஓட்டம் தடைபட்டதையும் கண்டறிந்தனர். எனவே துண்டான கால்களை இணைக்க அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, திருச்சி அட்லஸ் மருத்துவமனையின் டாக்டர் ஜெய்கிஷ் தலைமையில் டாக்டர்கள் பாலாஜி, சண்முகம் ஆகியோர் அடங்கிய மருத்துவர்கள் குழு ஆப்பரேட்டிங் மைக்ரோஸ்கோப் உதவியுடன் துண்டான கால்களை அறுவை சிகிச்சை மூலம் இணைத்து சாதனை புரிந்துள்ளனர்.

வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை செய்து முடித்துள்ள மருத்துவகுழுவினரை நீங்களும் பாராட்ட நினைத்தால், இதுதான் திருச்சி அட்லஸ் மருத்துவமனையின் தொலைபேசி எண்கள் : 0431&2701248,
0431&2701348

1 Comment
  1. xnxx videos says

    Heey there! Do yoou usee Twitter? I’d lijke to follow yoou iff that would bbe ok.
    I’m absolutdly enjoying your blogg aand lookk fodward too
    neew posts. xnxx

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்