Rock Fort Times
Online News

மகளிருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர் விஜய்:* அக்டோபர் 2 முதல் மாவட்டம் விட்டு மாவட்டங்களுக்கும் கட்டணமின்றி பேருந்துகளில் பயணிக்கலாம்…!

மகளிருக்கான வெற்றி பயணம் திட்டத்தின் கீழ் பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லா பயணம் விரிவுப்படுத்தப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். வருகிற அக்டோபர் 2-ம் தேதி முதல் இத்திட்டம் அமல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து 110 விதியின் கீழ் அறிவிப்பை வெளியிட்ட அவர், “முதற்கட்டமாக மாநகரம், நகரப் பகுதிகளில் இயங்கும் எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ்., டீலக்ஸ் அரசுப் பேருந்துகளிலும், மகளிர் கட்டணமில்லா பயணங்கள் மேற்கொள்ளலாம். மாவட்டங்களுக்கிடையே பயணம் மேற்கொள்ள ஏதுவாக புறநகர் (Mofussil) மற்றும் மலைப் பகுதிகளில், சாதாரணக் கட்டண பேருந்துகளிலும், மகளிர் கட்டணமில்லா பயணங்கள் மேற்கொள்ளலாம். தேசத்தந்தை காந்தியடிகள் பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதி முதல் இத்திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் ஆண்டுதோரும் தோராயமாக 6,000 கோடி ரூபாய் செலவினம் ஏற்படும். வருமான உச்சவரம்போ மற்றும் மேற்கொள்ளவிரும்பும் பயண எண்ணிக்கையிலோ கட்டுப்பாடுகள் இல்லை. இத்திட்டத்தின்கீழ் திருநரும் (Transgender) கட்டணமில்லா பயணங்கள் மேற்கொள்ளலாம்” எனத் தெரிவித்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்